பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது;

Update: 2023-01-27 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தில் 17 வயது பிளஸ்-2 மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த பிரகாசம் மகன் சரவணன்(23) என்பவர் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்