மோட்டார் சைக்கிளில் கடத்திய150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:தொழிலாளி கைது

போடியில் மோட்டார் சைக்கிளில் கடத்திய 150 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-09 18:45 GMT

போடி பகுதியில் புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி தாலுகா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பனோரமா நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் ஒருவர் வந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டைகளில் பண்டல், பண்டல்களாக சுமார் 150 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், போடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜெயவேல் (வயது 42) என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெயவேல் எங்கிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தார், எங்கு கொண்டு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்