தர்மபுரியில் நர்சிங் கல்லூரி மாணவி கடத்தல்-அனைத்து மகளிர் போலீசார் விசாரணை
தர்மபுரி:
தர்மபுரியை சேர்ந்த 17 வயது மாணவி பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதில் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது 21) என்ற வாலிபர் தங்கள் மகளை கடத்தி சென்று இருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூவரசன் மற்றும் மாணவியை தேடி வருகிறார்கள்.