பாகலூர் அருகே 17 வயது சிறுமி கடத்தல்?-வாலிபர் மீது புகார்

Update: 2022-09-27 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அந்த சிறுமி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில், ஓசூர் தாசரிப்பள்ளி தின்னாவை சேர்ந்த 18 வயது வாலிபர் தங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்