லாட்ஜில் கேரள வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் கேரள வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-02 21:12 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் கேரள வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கேரள வாலிபர்

கன்னியாகுமரியில் மெயின்ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 30-ந் ேததி கேரள வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார்.

இந்தநிலையில் நேற்று காலையில் 11 மணி வரை அந்த வாலிபரின் அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் மேலாளர் ரமேஷ்குமார் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் வரவழைக்கப்பட்டு அவர் முன்னிலையில் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

தற்கொலை

அங்கு அந்த வாலிபர் மின்விசிறியில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்த செல்போனை கைப்பற்றினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், தற்கொலை செய்தவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புத்தன்குளம் பகுதியை சேர்ந்த விஜயகுமரன் என்பவரது மகன் ஆதர்ஷ்(வயது 35) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதர்ஷ் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்