ஊழியரை தாக்கிய கேரள வாலிபர் கைது

ஊழியரை தாக்கிய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-21 19:51 GMT

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 54). இவர் தலைமை தபால் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அங்குள்ள பணம் வசூல் செய்யும் கவுண்ட்டருக்குள் ஒரு வாலிபர் நுழைய முயன்றார். உடனே, கேசவன் அவரை தடுத்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த வாலிபர், கேசவனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன், அவரை கீழே தள்ளிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கேசவனை தாக்கியது கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சுனில்பாபு (36) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்