கேரள வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் கேரள வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கேரள மாநிலம் எர்ணாகுளம் புதுவை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவரின் மகன் விஷ்ணு (வயது 23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
விஷ்ணுவின் தம்பி வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் குடும்பத்தினர் வேலூர் காந்திரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தின் காரணமாக விஷ்ணுவிற்கு லேசாக மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு விடுதி அறையில் யாரும் இல்லாதநேரத்தில் விஷ்ணு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் விடுதிக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.