நடுரோட்டில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கிய கணவர் கைதுசமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கம்பம் அருகே நடுரோட்டில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-04-22 18:45 GMT

கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டி செல்லாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவனம்மாள் (26). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சிவனம்மாள் கோபித்துக் கொண்டு அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மதியம் கருப்பசாமி, சிவனம்மாள் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அவர் மனைவியை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார். இதை தட்டி கேட்ட அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களை கருப்பசாமி மிரட்டினார். இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி உத்தரவின் பேரில், ராயப்பன்பட்டி போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்