கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளியில்போலீஸ்-மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் போலீஸ்-மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலை பள்ளியில் போலீஸ் மற்றும் மாணவர்கள் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சுதா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். தங்களுக்கு இடையே சமூக, சமுதாய நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும். பிடிப்பில் கவனம் செலுத்த வேண்டும், என்றார். மேலும் மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் துணை தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுப்புராஜ், ரவீந்திரன், சுரேஷ் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.