காயாமொழிசி.பா.ஆதித்தனார் பள்ளி மாணவர் சாதனை
தேசிய திறனாய்வு போட்டியில் காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் மு.தனுஸ் 2022-23-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த மாணவரை தலைமை ஆசிரியர் ஞானபிரகாசி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி பழைய மாணவர்கள் சஙகத்தினர் பாராட்டினர்.
-