காயாமொழி-பேய்க்குளம் கோவில்களில் வருசாபிஷேக விழா

காயாமொழி-பேய்க்குளம் கோவில்களில் வருசாபிஷேக விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-06-29 18:45 GMT

திருச்செந்தூர்:

காயாமொழி சிவன்கோவில் மற்றும் பேய்க்குளம் சங்கரநயினார்புரம் சங்கரலிங்கசுவாமி கோவில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது.

காயாமொழி

திருச்செந்தூர் அருகே காயாமொழி சிவன் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு கோவிலில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டு ெசல்லப்பட்டது. பின்னர் கும்பத்தில் உள்ள புனித நீரால் விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருசாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பேய்க்குளம்

இதேபோன்று சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் சங்கரநயினார்புரம் சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் விக்னேஸ்வரர் பூஜை, புன்யாக வாகனம், வேதியாக அர்ச்சனை, வேத பாராயணம், மூலமந்திர வேள்விகள் நடைபெற்றது. தொடர்ந்து விமான அபிஷேகம், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை அருள்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்பாள் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்