காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா;
அவினாசி
அவினாசி ஒன்றியம் ராயம்பாளையத்தில் புகழ்பெற்ற காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.