கதிர்வேல் முருகன் கோவில் வருசாபிஷேக விழா

கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-04-07 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் நேற்று 18-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யா வாஜனம், கும்ப பூஜை, சண்முகர்ஜபம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகன், விநாயகர், தண்டாயுதபாணி சன்னதி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., வருசாபிஷேக கட்டளைதாரர் பி.எம்.வி. காளிராஜன், நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம். பரமசிவம், டாக்டர் லதா ஸ்ரீ வெங்கடேஷ் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக் குமார், மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், நகர தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய் பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிசாமி, எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜகுமார் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கி.வெள்ளைச்சாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்