கதிரிமங்கலம் ஏரி 43 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது

கதிரிமங்கலம் ஏரி 43 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. பொதுமக்கள் ஆடு வெட்டி கொண்டாடினர்.

Update: 2022-09-07 17:49 GMT

திருப்பத்தூர் தாலுகா கதிரிமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான கதிரி மங்கலம் ஏரி 22 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரி 43 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி முழு கொள்ளளவவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது. இதையொட்டி அப்பகுதி மக்கள் ஏரியில் ஆடு வெட்டி, பிரியாணி செய்து வழங்கினர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரி இளையராஜா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் லலிதா மோகன் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், சமூக ஆர்வலர் ராஜ்குமார், ஊர் கவுண்டர் ருத்ரமூர்த்தி உள்பட ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார். பின்னர் பிரியாணி சமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கோணப்பட்டு ஏரியிலிருந்து வரும் தண்ணீர் சாலையில் பாலம் இல்லாத வழியாக கதிரி மங்கலம் ஏரிக்கு வருகிறது. இதனால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. உடனடியாக கோணப்பட்டு பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும். மேலும் திருப்பத்தூர் புதுப்பேட்டை ெரயில்வே மேம்பாலம் அருகே தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அந்த வழியாக வர முடியாமல் கிருஷ்ணகிரி மேம்பாலம் வழியாக வந்து உள்ளே சுற்றி வரும் நிலைமை உள்ளது. உடனடியாக புதுப்பேட்டை மேம்பாலத்தில் தண்ணீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்