காசிவிஸ்வநாதர் கோவிலில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2022-09-21 17:04 GMT

காசிவிஸ்வநாதர் கோவிலில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

காங்கயம் பழையகோட்டை சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் 5-ம் நூற்றாண்டை சேர்ந்தது. பழமைவாய்ந்த கோவிலில் 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. இதனால் கோவிலில் பல இடங்களில் சேதடைமடைந்து காணப்படுவதால் கோவிலை புனரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அறநிலையத்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மேலும் கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் அவற்றின் பழமை தன்மை மாறாத வகையில் புணரமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை முதன்மை ஆலோசகர் அர்ஜுனன் தலைமையிலான தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். கோவிலில் சேதமடைந்த பகுதிகள், மண்டபம், சிலைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின் இவற்றை அறிக்கையாக தொல்லியல்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்ப

மேலும் செய்திகள்