ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை

ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-02-01 19:00 GMT

மராட்டிய மாநிலம் நாக்பூரில் தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், கரூரில் உள்ள 2 ஸ்கேட்டிங் அகாடமிகளை சேர்ந்த 23 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 29 தங்கம், 17 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 51 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர். மேலும் தனிநபர் சாம்பியன்ஷிப் கோப்பையும் கைப்பற்றினர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்