கருப்பாநதி அணை வறண்டது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பருவமழை பொய்த்ததாலும் கோடை வெயிலின் தாக்கத்தாலும் கருப்பாநதி அணை வறண்டது. இதனால் கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2023-02-22 18:45 GMT

கடையநல்லூர்:

பருவமழை பொய்த்ததாலும் கோடை வெயிலின் தாக்கத்தாலும் கருப்பாநதி அணை வறண்டது. இதனால் கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கருப்பாநதி அணை

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி மிகப்பெரியதாகும். இந்த நகராட்சியில் 33 வார்டுகளில் 32 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்களின் தண்ணீர் தேவைக்காக நகராட்சி நிர்வாகம் 18,500 குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளது. இதற்காக கருப்பாநதி குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி 35 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் தண்ணீரும் பெற்று ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வந்தனர்.

தண்ணீரின்றி வறண்டது

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும், தற்போது கொளுத்தி வரும் கோடை வெயிலாலும் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை தண்ணீரின்றி வறண்டது. இதனால் அணையில் இருந்து கிடைக்கும் 35 லட்சம் லிட்டர் முற்றிலும் குறைந்து விட்டது.

இதற்கு மாற்றமாக நகராட்சி மூலம் பெரியாற்று படுகையில் அமைக்கப்பட்டுள்ள 13-க்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறுகளில் இருந்து கிடைக்கும் குடிநீரையும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் 32 லட்சம் லிட்டர் தண்ணீரையும் கொண்டு நகரில் தடையின்றி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கருப்பாநதி அணை முற்றிலும் வறண்டு கிடப்பதால் வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்