கருணாநிதி நினைவு தினம்
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
விருதுநகர்
கருணாநிதியின் நினைவுதினத்தைெயாட்டி நேற்று விருதுநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். விருதுநகர் தேசபந்து திடலில் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன், நகர செயலாளர் தனபாலன், வடக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, பொதுக்குழு உறுப்பினர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் யூனியன் சேர்மன் மல்லி ஆறுமுகம் தலைமையில் மல்லி ராஜ்குமார் மற்றும் தி.மு.க.வினர் மல்லிபுதூரில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற சேர்மன் தங்கம் ரவிக்கண்ணன், நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி மற்றும் தி.மு.க.வினர் பஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். நகர தி.மு.க.வை சேர்ந்த பலராமன் மற்றும் சரவணகுமார் அன்னதானம் வழங்கினர். வத்திராயிருப்பில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையிலும், கிருஷ்ணன் கோவிலில் சிட்டிபாபு தலைமையிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.