கோவில்பட்டி கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.