கார்த்திகைத் தீபத்திருவிழா: திருவண்ணாமலை இணையதள சேவை மூலம் கார் பார்க்கிங் வசதி அறிமுகம்

திருவண்ணாமலையில் இணையதள சேவை மூலம் கார் பார்க்கிங் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-05 16:36 GMT

திருவண்ணாமலை,


திருவண்ணாமலையில் இணையதள சேவை மூலம் கார் பார்க்கிங் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக www.tvmpournami.in என்ற இணையதள பயன்பாடு மூலம் கார் பார்க்கிங் வசதியை காவல் துறை மற்றும் அருணை பொறியியல் கல்லூரி இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

இணையதளத்தை பயன்படுத்தி கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த 58 இடங்களில் பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டுள்ளன. இதில் 12 ஆயிரம் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.

தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் இதர பொதுமக்கள் ஆகியோர் நெரிசலை தவிர்க்க பார்க்கிங் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இணையதள மூலம் பார்க்கிங் டிக்கெட் பெற்றவர்கள் நாளை (டிசம்பர் 6-ம் தேதி) பிற்பகல் 3 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்