யோகாவை வலியுறுத்தி கர்நாடக வாலிபர் விழிப்புணர்வு நடைபயணம்
யோகாவை வலியுறுத்தி கர்நாடக வாலிபர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.;
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 29), யோகா பயிற்சியாளர். இந்த நிலையில் யோகா குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணன் கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி மைசூரில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் ஊர், ஊராக நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து நேற்று புதுக்கோட்டை வந்தார். புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். அவர் கையில் தேசிய கொடியுடன் நடந்து சென்றார். மேலும் பொதுமக்களிடம் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றார். நாடு முழுவதும் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.