சின்னசேலத்தில் திறனாய்வு கராத்தே போட்டி
சின்னசேலத்தில் திறனாய்வு கராத்தே போட்டி நடைபெற்றது.;
சின்னசேலம்,
சின்னசேலத்தில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான திறனாய்வு கராத்தே போட்டி நடைபெற்றது. இதற்கு இந்திய சிரிட்டோ-ரியூ கராத்தே யூனியன் டிராகன் கராத்தே பள்ளி நிறுவனரும், மூத்த துணை தலைவருமான சீகான் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
போட்டியில் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியின் நடுவராக தஞ்சை சென்செய் சந்தீப்குமார், சின்னசேலம் செம்பெய்- ஹரிஹரன் ஆகியோர் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் சமூக ஆர்வலரும், உடற்கல்வி ஆசிரியருமான அருள்சாமி பங்கேற்று கராத்தே பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட டிராகன் சிரிட்டோ-ரியூ கராத்தே அசோசியேசன் அமைப்பின் சென்செய் சக்திவேல் செய்திருந்தார்.