மாணவர்களுக்கு கராத்தே சான்றிதழ்

வடக்கன்குளத்தில் நடந்த கராத்தே தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2023-10-26 21:28 GMT

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் கட்டளை மன்னா வணிக வளாகத்தில் கராத்தே பெல்ட் தேர்வு நடைபெற்றது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கராத்தே பெல்ட் வழங்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் கராத்தே எச்.ராஜ் தலைமை தாங்கினார். வடக்கன்குளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாக்கியசெல்வி, வார்டு உறுப்பினர்கள் கோகிலம், சுரேஷ் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்