காரைக்குடி ஆசிரியருக்கு மாநில விருது
காரைக்குடி ஆசிரியருக்கு மாநில விருது வழங்கப்பட்டது
காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் முத்துப்பாண்டியனுக்கு தமிழக அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் தமிழகத்தின் சிறந்த கலை ஆசிரியருக்கான மாநில விருதும், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் அமைச்சர் சாமிநாதனால் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. விருது பெற்ற முத்துப்பாண்டியனை பள்ளி குழு தலைவர் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, பள்ளிக்குழு செயலர், அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் ராஜமோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன், உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர். முத்துப்பாண்டியன் விருது தொகையை பள்ளி வளர்ச்சி நிதிக்காக பள்ளி குழு தலைவரிடம் வழங்கினார்.