காரைக்கால் மீனவர்கள் நிறுத்த வேண்டும்

காரைக்கால் மீனவர்கள் நிறுத்த வேண்டும்;

Update: 2023-06-03 18:45 GMT

இரட்டை மடி வலை பயன்படுத்துவதை காரைக்கால் மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்று நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவசர ஆலோசனை கூட்டம்

அக்கரைப்பேட்டையில் நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்தி தொழில் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் போது காரைக்கால் மாவட்ட மீனவர்கள் எந்த காரணத்தை கொண்டும் தமிழ்நாடு கடல் எல்லையில் மீன்பிடி தொழில் செய்ய வரக்கூடாது.மீன்பிடி தடைக்காலம் முடிந்து காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மீறி தமிழ்நாடு கடல் எல்லையில் தொழில் செய்ய வந்தால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள், காரைக்கால் மாவட்ட விசைப்படகுகளை சிறைபிடித்து மீன்வளத்துறையில் ஒப்படைக்க வேண்டும்.

தொழில் மறியல் போராட்டம்

நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் காரைக்கால் மாவட்டத்திற்கு சொந்தமான விசைப்படகுகள் தொழிலுக்கு செல்ல கூடாது. வியாபார ரீதியாக எவ்வித தொடர்பும் வைக்க கூடாது. காரைக்கால் மாவட்ட விசைப்படகுகளுக்கு ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை வழங்க கூடாது.

இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தடைக்காலம் முடிந்தவுடன் வருகிற 14-ந்தேதி முதல் நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவ கிராமங்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்