கன்னியாகுமரி: சாலை விபத்தில் 4 பேர் பலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி...!

கன்னியாகுமரி சாலை விபத்தில் பலியான 4 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Update: 2023-05-12 11:20 GMT

சென்னை,

திருச்செந்தூர் அருகில் உள்ள கோவில் ஒன்றில் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளை பகுதியைச் சேர்ந்த ஆடல், பாடல் இசைக் கச்சேரிக் குழுவினர் 12 பேர் நேற்று நிகழ்ச்சி நடத்தச் சென்றனர். அவர்கள் தங்களுடைய சுமோ வாகனத்தில் சென்று இருந்தனர். இரவு அங்கேயே தங்கிவிட்டு இன்று காலையில் வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

இவர்களது சுமோ கார் திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது வெள்ளமடம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்தும், சுமோவும் நேருக்கு, நேர் மோதின. இதில் சுமோ ஓட்டுநர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த 8 பேர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆற்தலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பெற்று வரும் 6 நபர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்