கண்ணதாசன் நினைவுநாள் அனுசரிப்பு

கண்ணதாசன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-10-17 18:45 GMT

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று அவர் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அமைப்புக்களின் சார்பில் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் அரசவை கவிஞரான கண்ணதாசன், சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவரது 42-வது நினைவு நாளையொட்டி நேற்று சிறுகூடல்பட்டியில் நிறுவப்பட்டிருக்கும் அவரது சிலைக்கு மாலையணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கண்ணதாசன் இலக்கிய பேரவைத் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை தாங்கினார். லெனின் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பேரவை செயலாளர் சோலையப்பன், கண்ணதாசன் குறித்த கவிதை தொகுப்பினை வாசித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் மாவட்ட இணை செயலாளர் மருதுபாண்டியன், கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளி செயலர் குணாளன், மருத்துவர் கனகவேல், வட்டார துணை தலைவர் ஜெயராஜ், இளைஞர் காங்கிரஸ் சுப்பிரமணியன், தொழிற்சங்க தலைவர் விஸ்வநாதன், ஆற்காடு சுப்பிரமணியன், சிறுகூடல்பட்டி ராமநாதன், திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கவிஞர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன், சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் சங்கர் மற்றும் பலர் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்