விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்

விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-04 18:45 GMT

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இக்கோவிலில் 14-ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா கஞ்சி கலய ஊர்வலத்துடன் நடைபெற்றது. இவ்விழாவானது நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னர் 5 மணிக்கு மூலவர் ஆதிபராசக்தி அன்னைக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து காலை 7 மணிக்கு சித்தர் சக்தி பீட மாவட்ட தலைவர் ஜெயபால் சக்தி கொடி ஏற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். காலை 10.30 மணியளவில் கிழக்கு புதுச்சேரி சாலையில் இருந்து கஞ்சி கலயங்களுடன் ஓம்சக்தி செவ்வாடை பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்தை சக்திபீட தலைவர் சீத்தாராமன் தொடங்கி வைத்தார். சக்தி பீட நிர்வாகிகள் சீதாபார்வதி அம்மாள், கிருஷ்ணவேணி, கவிதா, வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கஞ்சி கலய ஊர்வலமானது கிழக்கு புதுச்சேரி சாலையில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. அதன் பிறகு பகல் 11 மணிக்கு ஆதிபராசக்திக்கு கஞ்சி வார்த்தலும், பாலாபிஷேகமு நடைபெற்றது. இதில் 1,008 பேர் கலந்து கொண்டு பாலாபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்