மணியனூர் பகுதியில் மொபட்டில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பியோடிய பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு

மணியனூர் பகுதியில் மொபட்டில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பியோடிய பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு

Update: 2022-07-30 17:00 GMT

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே மணியனூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது மணியனூர் முதலியார் தெருவில் ஒரு பெண் மொபட்டில் வந்தார். சந்தேகத்தின்பேரில் போலீசார் மொபட்டை நிறுத்தினர். அந்த சமயம் போலீசாரை கண்டதும் மொபட்டை கீழே போட்டு விட்டு அந்த பெண் ஓடி விட்டார்.

இதையடுத்து போலீசார் மொபட்டை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையில் தப்பி ஓடிய பெண் அதே பகுதியை சேர்ந்த ராஜூ மனைவி கமலாதேவி (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்