கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்:கூடலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்- திருக்கல்யாணம்- வருகிற 30-ந்தேதி நடக்கிறது

கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 30-ஆம் தேதி கூடலூரில் சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

Update: 2022-10-23 18:45 GMT

கூடலூர்

கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 30-ஆம் தேதி கூடலூரில் சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

கந்த சஷ்டி விழா தொடக்கம்

முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சஷ்டி விழா நடக்கிறது. கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னிதானத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

தொடர்ந்து 29-ந் தேதி வரை காலை 11 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட உள்ளது. பின்னர் 30-ம் தேதி காலை முதல் மாலை 5 மணி வரை கணபதி ஹோமம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து முருகப் பெருமானுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்படுகிறது.

சூரசம்ஹாரம் - திருக்கல்யாணம்

பின்னர் இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருகப்பெருமான் எழுந்தருளி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சூரபத்மனை முருகன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடக்கிறது. தொடர்ந்து முருகனை சாந்தப்படுத்தும் பாவனாபிஷேகம் நடக்கிறது. மறுநாள் (31-ம் தேதி) காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடக்கிறது. பின்னர் திருக்கல்யாண விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்