காஞ்சிபுரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 3 வாலிபர்கள் உள்ளே இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர்.
இவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்குவதற்காக உடைகளை வெளியே வைத்து உள்ளார். இதனை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் கழிவுநீர் தோட்டிக்குள் எட்டிப்பார்த்து உள்ளனர். அப்போது 3 பேர் மயங்கி உள்ளே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போலீசார் உதவியுடன் கழிவுநீர் தோட்டியில் மயங்கி கிடந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.