காமராஜர் பிறந்தநாள்: விஜய்யின் த.வெ.க. சார்பில் மரியாதை

முன்னாள் முதல் அமைச்சர் காமராஜரின் 122-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.;

Update:2024-07-15 15:21 IST

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் காமராஜரின் 122-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்ததினத்தையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் திருவுருவ படத்திற்கும், அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்