காமராஜர் பிறந்த நாள் விழா

பாணாவரம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-07-15 18:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக அனுசரித்து மாணவர்களுக்கு கதை, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். சிவசங்கர் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சந்திரா முனிசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பேசும்போது ஒவ்வொரு மாணவரும் காமராஜரை முன்மாதிரியாக கொண்டு அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியராக சக்திகுமார், மன்ற இணை ஆசிரியராக எம்.எஸ்.சங்கர், உடற்கல்வி ஆசிரியர் எல்லன் பிரபு, உதவி தலைமை ஆசிரியர் கோபி, இருபால் ஆசிரியர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் மாணவர் சுற்றுச்சூழல் மன்றம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகப் பகுதிகளில் முளைத்துள்ள செடிகளை அகற்றும் பணியும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்