காமநாயக்கன்பட்டிபுனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா: ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம்
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;
நாலாட்டின்புத்தூர்:
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல பெருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு மறையுரை சிந்தனை, நற்செய்தி வழங்கப்படுகிறது. வருகிற 12-ந்தேதி காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை அனைத்து பக்த சபையினர் சார்பில் மரியன்னை மாநாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜீடுபால்ராஜ் மற்றும் பங்குத்தந்தையர்கள் சார்பில் புதுநன்மை விழா நடக்கிறது.
வருகிற 14-ந்தேதி பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் பங்குதந்தையர்கள் பங்கு பெறும் ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் மறையுரை சிந்தனை நிகழ்ச்சி நடைபெறும்.
வருகிற 15-ந்தேதி அதிகாலை 2 மணியளவில் பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் அருட்தந்தை ஹென்றிஜெரோம் முன்னிலையில் முக்கிய நிகழ்வான தேரடித்திருப்பலி மற்றும் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை விழா கால சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், மாலை 4 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் மற்றும் திருத்தலஅதிபர் அந்தோணி குரூஸ், உதவி பங்குதந்தை செல்வின் ஆகியோர் செய்து வருகின்றனர்.