ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே சாகுபுரம் கமலாவதி சீனியர் செக்கண்டரி பள்ளியின் 50-வது ஆண்டு ஆண்டினையொட்டி பொன்விழா ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் டிரஸ்டியும், சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவருமான ஜி.ஸ்ரீனிவாசன் தலைமையேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக தலைவர் டி.கே.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். பள்ளியின் முதல்வர் எஸ்.அனுராதா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பள்ளி தலைமை ஆசிரியை என்.சுப்புரத்தினா வரவேற்று பேசினார். தொழிற்சாலையின் மூத்த பொது மேலாளர் பி.ராமச்சந்திரன் பள்ளியின் மாணவ-மாணவிகளின் மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ் ஆகியோர் பேசினார்கள்.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மற்றும் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் பாடங்களில் 100 சதவீத மதிப்பெண் பெற உழைத்த ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் பள்ளியில் தொடர்ந்து 25 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள், பணியாற்றி வரும் ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு சிறப்பு பரிசினையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.ஸ்டீபன் பாலாசீர் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஆலோசனைப்படி பள்ளியின் அட்மினிஸ்ட்ரேட்டர் வி.மதன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.