தனக்கென ஒரு அரசியல்.. சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 57ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'தன்னடையாளம் பேணுவதோடு பிறரடையாளம் போற்றவும் செய்து தனக்கென்றொரு அரசியல் முழங்கிவரும் அன்புச் சகோதரர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.