கேரள மாநில முன்னாள் மந்திரி கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

கேரள மாநில முன்னாள் மந்திரி கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-02 09:51 GMT

சென்னை,

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணன் (வயது 68) புற்று நோய் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். கண்ணூர் நகரைச் சேர்ந்த கொடியேரி பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 15 ஆண்டு காலம் பதவி வகித்தவர். மேலும் கடந்த முறை 2006 - 2011 வரை அச்சுதானந்தன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

அது தவிர, 2001, 2011 காலகட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சிபிஐஎம் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முன்னாள் அமைச்சரும், எனது இனிய நண்பருமான கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் ஒருவர். அவருக்கு என் அஞ்சலி" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்