கல்யாண வெங்கடேச பெருமாள் வீதி உலா
வேம்பி கிராமத்தில் கல்யாண வெங்கடேச பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
கலவையை அடுத்த வேம்பி கிராமத்தில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பலவித மலர்களால் அலங்கரித்து, சுவாமிக்கு நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. இரவில் முக்கிய விதிகள் வழியாக மங்கள வாத்தியங்கள் மற்றும் பஜனை பாடல்களுடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.