கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
சாயல்குடி அருகே கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் அரச மரத்து விநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக யாக சாலை பூைஜகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து நேற்று வேத, மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கடம் புறப்பாடு நடந்தது.
பின்னர் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கடுகு சந்தை சத்திரம், கடலாடி, சாயல்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கடுகு சந்தை சத்திரம் வீர சைவ ஆண்டிப்பண்டாரத்தினர் மற்றும் கும்பாபிஷேக நிர்வாக குழு, விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.