கழுகுமலை ராஜகாளியம்மன் கோவில் கொடைவிழா

கழுகுமலை ராஜகாளியம்மன் கோவில் கொடைவிழா நடந்தது.

Update: 2023-07-25 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை ஆசாரி தெரு, விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ராஜகாளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கடந்த 23-ந் தேதிமாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு வடக்குத்தி அம்மனை வழியனுப்புதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு குற்றாலம், இருக்கன்குடி, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அக்கினி சட்டி எடுத்து ஊர்விளையாடல் நிகழ்ச்சி மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(புதன்கிழமை) காலை 10 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்