கள்ளக்குறிச்சி: மாணவி மர்ம மரணம்: வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் - சசிகலா

மாணவி மர்ம மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என சசிகலா கூறியுள்ளார்.

Update: 2022-07-20 18:20 GMT

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். சம்பவம் நடந்து பல நாட்கள் கழித்து சந்தேகத்தின் அடிப்படையில் பள்ளி நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் சூப்பிரண்டும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல இருக்கிறது. எனவே ஸ்ரீமதி மரணம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஒரு வெளிப்படையான விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு மாணவி மரணத்தில் உள்ள உண்மையை விரைவில் கண்டறிய வேண்டும்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத்தர வேண்டும். மாணவியை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கு நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்ட தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்