கள்ளக்குறிச்சி: திரவுபதி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்!

உளுந்தூர்பேட்டை அருகே திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.;

Update: 2023-05-11 05:25 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்று சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினமும் சாமிக்கு காலை, மாலை ஆகிய இரு வேளைகளும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், இரவு சாமி வீதிஉலாவும் நடந்தது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இதில் உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தீ மிதி திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்