கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 27 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 27 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;
உளுந்தூர்பேட்டை தனிதாசில்தாராக பணியாற்றி வந்த சரவணன் சங்கராபுரம் தாசில்தாராகவும், சங்கராபுரம் தனிதாசில்தாராக பணியாற்றி வந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி தாசில்தாராகவும், கல்வராயன்மலை தனிதாசில்தாராக பணியாற்றி வந்த இந்திரா சின்னசேலம் தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டா் அலுவலக மேலாளர்(பொது) சையத் காதர், கல்வராயன்மலை தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி தனிதாசில்தார் மணிமேகலை உளுந்தூர்பேட்டை தாசில்தாராகவும், திருக்கோவிலூர் தனி தாசில்தார் கண்ணன் திருக்கோவிலூர் தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமன், சின்னசேலம் தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் பிரபாகரன், திருக்கோவிலூர் தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி தனி தாசில்தார்(தேர்தல்) பாலசுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், கள்ளக்குறிச்சி தென்னக ரெயில்வே தனிதாசில்தார்(நில எடுப்பு) கமலம், சின்னசேலம் குடிமை பொருள் தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், கள்ளக்குறிச்சி தனி தாசில்தாராகவும்(பறக்கும் படை), உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வன நிர்ணய அலுவலர்
இதேபோல் கள்ளக்குறிச்சி தாசில்தார் விஜயபிரபாகரன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராகவும்(குற்றவியல்), சின்னசேலம் தனிதாசில்தார் ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி தென்னக ரெயில்வே(நில எடுப்பு) தாசில்தாராகவும், சின்னசேலம் தாசில்தார் அனந்தசயணன், சங்கராபுரம் தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் அலுவலக தனி தாசில்தார்(பறக்கும் படை)காதர் அலி, திருக்கோவிலூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், உளுந்தூர்பேட்டை தனி தாசில்தாராகவும், உளுந்தூர்பேட்டை தனி தாசில்தார் ராஜூ, கள்ளக்குறிச்சி தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலர் வளர்மதி, கள்ளக்குறிச்சி பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் வாசுதேவன், கள்ளக்குறிச்சி தனி தாசில்தாராகவும்(தேர்தல்), கல்வராயன்மலை தாசில்தார் அசோக், கள்ளக்குறிச்சி தனி தாசில்தாராகவும்(ஆலய நிலங்கள்), கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் மணிகண்டன், உளுந்தூர்பேட்டை தனி தாசில்தாராகவும், திருக்கோவிலூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன், கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், திருக்கோவிலூர் தாசில்தார் குமரன், கல்வராயன்மலை தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர்(குற்றவியல்) சிவசங்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராகவும்(பொது), சின்னசேலம் தனிதாசில்தார் அருங்குளவன், கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலராகவும், கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் நடராஜன், கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.