கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில் கடைகள் ரூ.3½ கோடிக்கு ஏலம்

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில் கடைகள் ரூ.3½ கோடிக்கு ஏலம் போனது.;

Update: 2023-06-06 20:46 GMT

அழகர்கோவில், 

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோவில் கடைகள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் வைத்து நேற்று ஏலம் விடப்பட்டது. இதில் கள்ளழகர் கோவில், அழகர் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் தேங்காய் பழகடைகள், பூக்கடைகள், முடி சேகரம், பொரிகடலை கடை, பொம்மை கடை, ஆடு, சேவல், முடி சேகரம், மற்றும் அழகர் கோவில் பஸ் நிலைய டீக்கடை உள்ளிட்ட பல்வேறு இனங்கள் ரூ.2 கோடியே 83 லட்சத்து 35 ஆயிரத்து 500-க்கு ஏலம் விடப்பட்டது.

அதே மண்டப வளாகத்தில் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலின் கடைகளும் ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் பழக்கடை, உணவு விடுதி, பொரிகடலை, பொம்மை, பூ, கடைகள், மற்றும் சேவல், முடி சேகரம் போன்று பல்வேறு இனங்கள் ரூ.63 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த 2 கோவில்களுக்கும் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல், அடுத்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி முடிய ஒரு வருடம் காலம் வரை இந்த ஏல உரிமம் செல்லும். கடந்த வருடத்தை காட்டிலும் 10 சதவீதம் தொகைக்கு கூடுதலாக ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலம் நடைபெறும் போது இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, அருள் செல்வன், பேஷ்கார் முருகன், மேலாளர் தேவராஜ், மற்றும் கோவில் பணியாளர்கள், ஒப்பந்தகாரர்கள் உடன் இருந்தனர். அப்பன் திருப்பதி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்