கழுகுமலை அரசு பள்ளியில் புதிய சுகாதார வளாகம் திறப்பு விழா
கழுகுமலை அரசு பள்ளியில் புதிய சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.;
கழுகுமலை:
கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹெல்ப் கிட்ஸ் டிரஸ்ட் சார்பில் 5 புதிய சுகாதார வளாக கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், சீட் அறக்கட்டளை அறங்காவலர் ராஜாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சீட் அறக்கட்டளை மருத்துவ ஆலோசகர் டாக்டர் வனிதா, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜகோபால் பேசினார். நிகழ்ச்சியில் வானரமுட்டி மருத்துவர் சண்முகம், ஹெல்ப் கிட்ஸ் டிரஸ்ட் சார்பில் பீர்முகைதீன், தமிழ்செல்வி, லோகேஸ்வரி மற்றும் பள்ளி ஆசியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.