கழுகுமலை அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கழுகுமலை அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-11 18:45 GMT

கழுகுமலை;

கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீஸ்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கலந்து கொண்டு, போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றை ஒழிக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜ், என்.எஸ். எஸ் திட்ட அலுவலர் பால்ச்சாமி, மாணவர் காவல்படை பொறுப்பு ஆசிரியர் ரூபன் உள்பட பலர் கலந்து கொண்டனர

Tags:    

மேலும் செய்திகள்