சோணையா கோவில் களரி உற்சவ விழா

சோணையா கோவில் களரி உற்சவ விழா நடைபெற்றது;

Update: 2023-06-04 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரைஅருகே கீழமேல்குடி சாலையில் உள்ள வழக்குடைய அய்யனார், சோணையா சுவாமி கோவிலில் களரி உற்சவ திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற களரி உற்சவ விழாவில் வழக்குடைய அய்யனாருக்கும், சோணையா சுவாமிகளுக்கும் மற்றும் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவில் சீனிமடை சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சீனிமடை கிராமத்தை சேர்ந்த சோணையா சாமி கும்பிடும் பங்காளிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்