கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்கம் - டெண்டர் கோரியது தமிழக அரசு

கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;

Update: 2024-10-13 08:37 GMT

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.487 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதன் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்கத்தில் 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ரூ.102 கோடியிலும், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகியவை ரூ.108 கோடியிலும் அமைய உள்ளன. திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவிலான வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளபட உள்ளன.

அதேபோல், வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் ஆகிய பணிகள் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிகளை 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் நிறைவு செய்ய பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்