காலபைரவர் கோவில் குடமுழுக்கு

திருமருகல் அருகே காலபைரவர் கோவில் குடமுழுக்கு;

Update: 2023-08-27 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி மேலகொத்தமங்கலம் கிராமத்தில் காலபைரவர் கோவில் குடமுழுக்கு கடந்த 23-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அஷ்டபைரவ ஹோமம், அருட்பிரசாதம் வழங்குதல் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், மண்டப பூஜை, கால பைரவர் மகா மந்திர ஹோமம், அஷ்ட பைரவர் சாந்தி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று கோ பூஜை, பிம்பசுத்தி, ருத்ர ஹோமத்தை தொடர்ந்து காலை 9 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. அதேநேரத்தில் மூலஸ்தான குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்