குறுவட்ட அளவில் கபடி போட்டி
வத்திராயிருப்பில் குறுவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.;
வத்திராயிருப்பு,
2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான வத்திராயிருப்பு ஒன்றிய அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கான கபடி மற்றும் தடகளப்போட்டிகள் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டி நேற்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியினர் செய்திருந்தனர். குறுவட்ட கபடி மற்றும் தடகள போட்டிகள் வருகிற 9-ந் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.